மனக்கவலையை போக்கும் மருந்தில்லா மருத்துவம் – அக்குபஞ்சர்.
மனக்கவலை இல்லா மனிதன் இந்த உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டான்! இந்த மனக்கவலையை போக்குவது எப்படி?. மனக்கவலைக்கு மருந்து இல்லை என்று கூட நம் முன்னோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் மாற்றுமுறை மருத்துவமான அக்குபங்க்சர் மருத்துவம் சொல்வது என்னவென்றால் மனக்கவலையை எளிதாக போக்க முடியும்! மனக்கவலை என்பது தீர்க்ககூடிய நோய்தான்.
இந்த மனக்கவலைக்கு முக்கியமான காரணமாக இருப்பது சக்தி குறைந்த மண்ணீரலும், வயிறும், இதயமும் தான் என்று சொல்கிறது அக்குபங்க்சர் மருத்துவ முறை!
வயிறு மற்றும் மண்ணீரலுக்கு சக்தியுட்டி இதையத்தை அமைதி படுத்திவிட்டால் இந்த மனக்கவலை இருந்த அடையாளம் தெரியாமல் பறந்துவிடும்,
கீழ் காணும் அக்கு புள்ளிகளில் உங்கள் ஆள்காட்டி விரலையோ அல்லது கட்டை விரலையோ ௭ (7) முறை கடிகார சுழற்சி முறை மற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுழற்சி முறையில் அழுத்தம் கொடுக்கவேண்டும் இந்த முறைக்கு அக்குபிரசர் என்று பெயர். இதன் மூலம் மனக்கவலை பறந்தோடிவிடும்.
எனினும் நன்கு பயிற்சி பெற்ற அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் விரைவான குணம் பெறலாம்.
அக்கு புள்ளிகள் : CV12, H6, CV14, H7, ST36, SP6
[ குறிப்பு : SP6 என்ற அக்குபுள்ளியை கர்ப்பிணிகள் கட்டாயம் பயன்படுத்த கூடாது.]
த.நா.பரிமளச்செல்வி,
அக்குபங்க்சர் மருத்துவர்,

மனக்கவலையை போக்கும் அக்குபங்க்சர் சிகிச்சை முறை