தைராய்டு என்பது ஹார்மோன்களின் சமநிலை இன்மையே காரணம், உடலின் கால்சியம் அளவை கட்டுப்படுத்துவது இந்த தைராய்டு சுரப்பிகள் ஆகும்.
தைராய்டு பிரச்சினைகள் இரண்டு வகைப்படும்!
௧. ஹைப்போ தைராய்டிசம் (HypoThyroidism)
௨. ஹைப்பர் தைராய்டிசம் (HyperThyroidism)
அதிக அளவு தைராய்டு ஹார்மோன் சுரப்பதை ஹைப்பர் தைராய்டிசம் எனவும், குறைவாக சுரந்தால் அதை ஹைப்போ தைராய்டிசம் எனவும் வகைப்படுத்தப் படுகிறது.
அறிகுறிகள்:
ஹைப்போ தைராய்டிசம்:
௧, உடல் பலஹீனம்
௨, மலச்சிக்கல்
௩, உடல் எடை கூடுதல்
௫, முடி மெலிதாகுதல்
௬, மாத விளக்கு பிரச்சினை
ஹைப்பர் தைராய்டிசம்:
௧, எடை இழப்பு
௨, பசி அதிகம்
௩, வியர்வை அதிகரித்தல்
௪, தோல் நிறம் மாறுதல்
௫, வயிற்றுப்போக்கு
௬, முடி கொட்டுதல்
இந்த தைராய்டு ஹார்மோன்களை ஹைபோதலமஸ் மற்றும் என்டோகிரைன் அமைப்புகள் கட்டுப்படுத்துகிறது. இந்த தைராய்டு பிரச்சினைக்கு அக்குபங்க்சர் / அக்குபிரசரில் நிரந்தர தீர்வு காண முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்றுமுறையில் அழுத்தம் கொடுக்கவேண்டும். அவ்வாறு புள்ளிகளை தூண்டுவதன் மூலம் இதற்க்கு தீர்வு காணலாம்.
அக்கு புள்ளிகள் :
ஹைப்போ தைராய்டிசம்: Gv7, YinTang, K7, Sp6, Li18
ஹைப்பர் தைராய்டிசம்: St9, Sp6, P6, Liv3, Li4, H7, St40
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்

Acupuncture Points For Thyroid – ChennaiAcupuncture
Good
payanulla pathivu thanthamaikku nantri
நன்றி ஐயா